News July 31, 2024
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நேரடி ஒளிபரப்பு

சட்டசபை செயலர் தயாளன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் 15வது சட்டசபை, 5வது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு ஆளுநர் ராதாகிருஷ்ணன் உரையுடன் தொடங்குகிறது. ஆளுநரின் உரை நிகழ்ச்சி, சமூக வலைதங்களான யூடியூப், முகநூல், எக்ஸ் தளம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்படும் என அறிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
புதுவை: மக்களே உஷாரா இருங்க! எச்சரித்த எஸ்.பி!

புதுவையில் மொபைல் ஆப் மூலம் உடனடி கடன் & குறைந்த வட்டியில் லோன் தருவதாக ஆன்லைனில் பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன. அதை நம்பி பொதுமக்கள் கடன் பெற்ற பிறகு, அவர்களுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுகின்றனர். இதனால், பலரும் லட்சக்கணக்கில் பணத்தை ஏமாந்து வருகின்றனர். ஆகையால், ஆன்லைனில் உலா வரும் உடனடி கடன் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி எச்சரித்துள்ளார். SHARE
News August 17, 2025
புதுச்சேரியின் காந்தி யார் தெரியுமா?

புதுச்சேரியின் ‘பிரெஞ்சிந்திய காந்தி காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா? இன்றைய புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்தான் இவர், திருநள்ளாறு அடுத்த இளையான்குடியில் அரங்கசாமி நாயக்கர் 1884 பிப்ரவரி 6 ஆம் நாள் பிறந்தார். தனது வீட்டிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு சமபந்தி உணவளித்தவர். புதுச்சேரியின் விடுதலைக்காக போராடிய இவர் பல நாளிதழ்களை எழுதியுள்ளார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News August 17, 2025
புதுச்சேரியில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள் விரும்பும் பட்டியலில் உலகிலேயே புதுச்சேரி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. சுதந்திர தினத்தையொட்டி தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் கன மழை பெய்கிறது. இதனால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு செல்ல முடியாத நிலை இதனால் புதுச்சேரியில் வழக்கத்தை விட இன்று அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.