News July 30, 2024
மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் திறக்கப்படும் தண்ணீரின் மூலம் பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். இன்று, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சாத்தனூர் அணையை தூர்வாரி, திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி மக்கள் தண்ணீர் அருந்திட வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய ஜல சக்தி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News July 8, 2025
அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தரிசனத்திற்காக இடைத்தரகர்கள் மற்றும் பிறரிடத்தில் பணம் தரக்கூடாது எனவும், பணம் வழங்கும் பக்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.
News July 8, 2025
வீட்டு வாடகை ஒழுங்குமுறை சட்டம் சொல்வது என்ன? (2/2)

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கான புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்.
News July 8, 2025
தி.மலையில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா? (1/2)

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் (9445000420) புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16989962>>தொடர்ச்சி<<>>