News July 30, 2024
சொரிமுத்தையனார் கோயில் வளாகத்தில் தங்க அனுமதி

காரையாறு சொரிமுத்தையனார் கோயில் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு ஆகஸ்டு 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை சொரிமுத்தையனார் திருக்கோயில் வளாகத்தில் தங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வனத்துறை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தங்கிக்கொள்ளலாம் என காவல்துறை மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
நெல்லை ம.சு பல்கலையில் உதவி பேராசிரியர் பணி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை உளவியல் துறையில் முதுகலை உளவியல் பயிற்றுவிக்க தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்கலை.நிதி நல்கை குழு விதி படி கல்வித் தகுதி நியமிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் 18ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் தரவுத்தாளை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சான்றுகளுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர்
News September 12, 2025
நெல்லை: பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் சஸ்பெண்ட்

தருவை அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆங்கில பட்டதாரி ஆசிரியர் குரு விநாயகம் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்வதாக மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.இந்த மனுவின் மீது விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விசாரணையில் ஆசிரியர் மீது சுமத்திய குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்ததால் இன்று முதன்மை கல்வி அதிகாரியால் பணி நீக்கம் செய்யபட்டார்.
News September 12, 2025
நெல்லை: வாய்க்காலில் விழுந்தவர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிங்கி குளத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாநிதி நேற்று முன்தினம் இரவில் மேலகரை பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் தவறி அருகில் உள்ள வாய்க்காலில் விழுந்துள்ளார். இதில் தண்ணீர் மூழ்கிய அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.