News July 30, 2024
நிலச்சரிவு அனைவருக்குமான பாடம்: அன்புமணி

மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் பற்றி, வயநாடு நிலச்சரிவின் மூலம் அனைவரும் பாடம் கற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அவர், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News December 5, 2025
மழைக்காலத்தில் மட்டுமே பாக்.,-க்கு நீர்: மத்திய அரசு

இந்தியாவின் சட்லஜ், பியாஸ் நதிகளில் இருந்து, பருவமழை காலத்தை தவிர வேறு எந்த காலத்திலும் PAK-க்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி, இந்த ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அணைகளின் பாதுகாப்பிற்காக மட்டுமே நீர் வெளியேற்றப்படுவதாக குறிப்பிட்டார்.
News December 5, 2025
அதிமுகவுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NDA-வின் CM வேட்பாளராக EPS இருக்கும்வரை அமமுக, அந்தக் கூட்டணியில் இணையாது என TTV தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பேசிய அவர், அமித்ஷாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றார். மேலும், வரும் தேர்தலில் துரோகம்(EPS) வீழ்த்தப்பட்டு அதிமுக மீண்டும் ஒன்றிணைக்கப்படும் என்பதை இன்றைய தினம் உறுதிமொழியாக எடுத்துள்ளதாகவும் கூறினார். உங்கள் கருத்து?
News December 5, 2025
நீங்கள் இதில் எந்த இடத்தில் இருக்கீங்க?

இந்திய மக்களின் வருமானம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இதில், எத்தனை சதவீத மக்கள் எந்த வருமான பிரிவில் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்க எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று தெரிஞ்சுகோங்க. SHARE.


