News July 30, 2024
BREAKING: கேரளாவில் மிகப்பெரிய நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு அருகே முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கனமழை காரணமாக பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டிருந்த பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Similar News
News December 8, 2025
இரவில் சந்தித்தார் ஓபிஎஸ்.. மீண்டும் கூட்டணியா?

கோவையில் நேற்று இரவு அண்ணாமலை – OPS சந்தித்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்புக்குழு நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும், சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால், NDA கூட்டணியில் மீண்டும் OPS இணைய வாய்ப்பு இருப்பதாக யூகங்கள் எழுந்துள்ளன.
News December 8, 2025
மீண்டும் எப்போது வருவார்கள் Ro-Ko?

ஆஸி., & SA அணியை துவம்சம் செய்து ரசிகர்களை குஷிப்படுத்திய Ro-Ko ஜோடி மீண்டும் எப்போது களத்திற்கு திரும்புவார்கள் என்ற அட்டவணை வெளிவந்துள்ளது. ஜனவரியில் நியூசிலாந்து தொடர், ஜூனில் ஆப்கானிஸ்தான் தொடர், ஜூலையில் இங்கிலாந்து தொடர், செப்டம்பரில் வங்கதேச தொடர், செப்டம்பர் – அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், அக்டோபர்- நவம்பரில் நியூசிலாந்து தொடர் என 2026-ல் மட்டும் 6 சீரிஸில் Ro-Ko விளையாடவுள்ளனர்.
News December 8, 2025
வெறும் வயிற்றில் தேங்காய்: இவ்வளவு நன்மைகளா?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 40-50 கிராம் தேங்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். *எலும்பு பிரச்னைகள் வருவதில்லை. *கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, செரிமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்கிறது. *சரும பொலிவு, முடி வளர்ச்சிக்கு நல்லது * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் *ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அதேசமயம் அதிகப்படியான தேங்காயும் சாப்பிடக்கூடாது.


