News July 30, 2024
ஜூலை 30: வரலாற்றில் இன்று!

*1626 – இத்தாலியில் நேப்பிள்ஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர். *1886 – சமூகநீதி போராளி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்தநாள் இன்று. *2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவு ரயில் தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர். *1995 – இலங்கை, வாழைச்சேனையில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் ராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.
Similar News
News December 5, 2025
இந்தியாவில் ரஷ்ய அதிபர் புடின் PHOTOS

நேற்றிரவு இந்தியாவில் தரையிறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர், விமான நிலையத்தில் இருந்து புடின், தான் வழக்கமாக பயணிக்கும் காரில் ஏறாமல், பிரதமர் மோடி காரில் பயணித்தார். இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. புடின் வருகை தொடர்பான போட்டோக்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 5, 2025
விமானப்படையில் வேலை, டிகிரி போதும்: APPLY NOW

விமானப்படையில் Flying and Ground Duty பணிகளில் 340 காலிப்பணியிடங்கள் உள்ளன. வயது வரம்பு: 20 – 26 வயது வரை. தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14. விண்ணப்பிக்க இங்கே <
News December 5, 2025
இன்று உலக மண் தினம்.. ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா?

உணவின் தொடக்கம் இந்த மண். பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் நம்பி இருப்பது இந்த மண்ணைதான். ஆனால், நாம் மண் பற்றி சிந்திக்கிறோமா? இல்லை! அதை சிந்திப்பதற்கான நாள்தான் இன்று. குறைந்து வரும் மண்வளம், மாசுபாடு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக மண் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னெடுக்க காரணமாக இருந்த தாய்லாந்து மன்னர் பூமிபாலின் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


