News July 29, 2024
5 ஆண்டுகளில் 34 வன விலங்குகள் உயிரிழப்பு

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஓசூர் வனச்சரகத்தில் வாகன விபத்தில் 34 வன விலங்குகள் உயிரிழந்துள்ளது. 20 மான், யானை, காட்டுப்பன்றி மற்றும் காட்டெருமை தாலா ஒன்று வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 20 மான்களின் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 2, 2025
கிருஷ்ணகிரியில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

கிருஷ்ணகிரி மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். <
News September 1, 2025
கிருஷ்ணகிரியில் அதிசய சிவன் கோயில்!

கிருஷ்ணகிரி, அத்திமுகத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஐராவதேஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த கோயிலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News September 1, 2025
கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.