News July 29, 2024
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 513 மனுக்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிக் கடன், இலவச வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவை கேட்டு மொத்தம் 513 மனுக்கள் பெறப்பட்டன.
Similar News
News November 9, 2025
கரூர்: ரூ.7,500 பரிசு… மக்களே உஷார்!

கரூர் மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!
News November 8, 2025
கரூரில் தட்டிதுக்கிய முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்டம், இன்று (08.11.2025) கரூர் கிழக்கு ஒன்றியம்,
நெரூர் தென்பாகம், என்.புதுப்பாளையம் கிராமம் திமுக-வை சேர்ந்த சி.நாகமணி, எம்.கந்தசாமி,த.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் திமுகவில் இருந்து விலகி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் அஇஅதிமுக தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏரளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News November 8, 2025
கரூர்: ADMK-வில் ஐக்கியம்! ஷாக்கில் DMK

கரூர் மாவட்ட திமுக-வைச் சேர்ந்த முன்னாள் தாந்தோணி நகர செயலாளர் ரவி, முன்னாள் நகர துணை செயலாளர் மகாதேவன் (ம) முன்னாள் வடக்கு நகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இது கரூர் திமுக-வினர் மத்தியில் ஷாக் ஏற்படுத்தியுள்ளது.


