News July 29, 2024
முகவர்களுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர்

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சிறுசேமிப்புத்துறை சார்பாக, அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களில் அதிக வசூல் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு கேடயங்கள், பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் கே.எம்.சரயு இன்று வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் மாவட்ட ஆட்சியரின்நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News September 1, 2025
கிருஷ்ணகிரியில் அதிசய சிவன் கோயில்!

கிருஷ்ணகிரி, அத்திமுகத்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஐராவதேஸ்வரர் சிவன் கோயில். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பொதுவாக ஒரு கோயிலில் ஒரு மூலவர் இருப்பார். ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும். காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள். இந்த சிறப்பு வாய்ந்த கோயிலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
News September 1, 2025
கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 1, 2025
கிருஷ்ணகிரி: 8th பாஸ் போதும்.. சொந்த ஊரில் அரசு வேலை

கிருஷ்ணகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காவேரிப்பட்டிணம், பர்கூர், வேப்பனப்பள்ளி, தளி, சூளகிரி, ஓசூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர் பணிக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15,700-50,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ள்வர்கள் இன்று முதல் செ.30ஆம் வரை <