News July 29, 2024

செல்வப் பெருந்தகை மீது பாஜகவினர் போலீசில் புகார்

image

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த காங்., தலைவர் செல்வப் பெருந்தகை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினார். இதில் அவர் தலைக்கவசம் அணியாமல் வந்தது குறித்து, ‘தலைவக்கவசம் உயிர் கவசம்’ என்ற வாசகம்சாமானியர்களுக்கு மட்டுமல்ல காங்., தலைவருக்கும் பொருந்தும் என பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்ற பாஜக நிர்வாகி மருது பாண்டியன் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News December 20, 2025

தென்காசி: பட்டா வைத்திருப்பவர்களுக்கு GOOD NEWS

image

தென்காசி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 0461-2340522 அணுகலாம். SHARE பண்ணுங்க.

News December 20, 2025

தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்

News December 20, 2025

தென்காசி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

image

தென்காசி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,51,902 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, வாக்காளர் எண் (அ) மொபைல் எண்ணை பதிவு செய்யவும். அதில், உங்கள் பெயர் வாக்குச்சாவடி விவரம் காட்டப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!