News July 29, 2024
திட்டமிட்டதற்கு முன்பாகவே ஓடிடி ரிலீஸ்?

‘இந்தியன் -2’ திரைப்படத்திற்கு சொல்லிக் கொள்ளும்படி பெரிய வரவேற்பு இல்லாததால், திட்டமிட்டதற்கு முன்பாகவே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக படம் திரையரங்குகளில் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் ரிலீஸாகும் நிலையில், பெரிய தொகை கொடுத்து ‘இந்தியன் -2’ வாங்கப்பட்டதால் 4 வாரங்களுக்குள் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 4, 2025
அதிகம் மது அருந்தும் டாப் 10 நாடுகள்

ஸ்டாடிஸ்டா ஆராய்ச்சித் துறை மற்றும் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு 2025-ன் படி, அதிக மது அருந்தும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவின் பெரு நகரங்களில் மது நுகர்வு அதிகரித்து வந்தாலும், டாப் 10-ல் இந்தியா இடம்பெறவில்லை. SHARE.
News December 4, 2025
BREAKING: விஜய் முடிவை மாற்றினார்

புதுச்சேரியில் தவெகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க <<18447638>>போலீசார் மறுத்துவிட்டனர்<<>>. அதேசமயத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வரும் டிச.9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த, தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
சரித்திரம் படைத்த மிட்செல் ஸ்டார்க்!

டெஸ்ட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸி.,யின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். அவர் 102 டெஸ்ட் போட்டிகளில் 415 விக்கெட்களை சாய்த்துள்ளார். முன்னதாக, பாக்., ஜாம்பவான் வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 16-வது இடத்தில் உள்ளார்.


