News July 29, 2024

தந்தையின் கண்களை பார்க்கவே பயம்: ரன்பிர் கபூர்

image

சிறுவயதில் தந்தையை பார்க்கவே பயமாக இருந்ததால், அவரது கண்களை பார்த்ததே இல்லை என பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் தெரிவித்துள்ளார். பெரிய பங்களா வீட்டில் பெற்றோர்கள் அடிக்கடி சண்டையிடும் சத்தத்தை மாடிப்படியில் உட்கார்ந்து கேட்டதாகவும், தந்தை ஒருமுறை கூட தனது கையை பிடித்தது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீதிருந்த அன்பை தந்தை ரிஷி கபூர் வெளிக்காட்ட இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

அநாகரிக அரசியல் எப்போது நிறுத்தப்படும்? அண்ணாமலை

image

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற போலீசார் மறுத்துவருவதால் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. இதனிடையே தமிழக மக்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தும் தங்கள் அநாகரிக அரசியல் நாடகங்களை DMK எப்போது நிறுத்தப் போகிறது என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இனியாவது கோர்ட்டின் உத்தரவை மதிப்பார்களா, அல்லது தங்கள் வழக்கமான பிரிவினை நாடகங்களை தொடர போகிறார்களா எனவும் கேட்டுள்ளார்.

News December 4, 2025

புடின் விமானத்தின் பிரமிக்க வைக்கும் அம்சங்கள்

image

ரஷ்ய அதிபருக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது தான் ‘Flying Kremlin’ விமானம். இதில் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு, ரேடார் – ஜாமிங் டெக்னாலஜி, வானில் இருந்தபடியே அணு ஆயுத தாக்குதல்களுக்கான உத்தரவு பிறப்பிக்கும் கட்டளை மையம் என பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஜிம், பெட்ரூம், சமையலறை என Kremlin மாளிகையில் இருப்பதை போன்ற சொகுசு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

News December 4, 2025

வீட்டில் இருந்தே செய்யலாம்.. தமிழக அரசு அறிவிப்பு

image

இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவு செய்வதற்கு ‘ஸ்டார் 3.0’ திட்டம் மூலம் புதிய மென்பொருளை அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த புதிய முறையில், சொத்து வாங்குவோர், விற்போர் அவர்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு OTP வரும். இதனை பதிவு செய்த பிறகு விரல் ரேகையை பதிவு செய்து பத்திரத்தை பதிவு செய்துகொள்ளலாம். SHARE IT.

error: Content is protected !!