News July 29, 2024
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜூலை 29) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
Similar News
News July 5, 2025
ஆகஸ்ட் 15ல் குட் பேட் அக்லி… எந்த டிவியில் தெரியுமா?

இதுல என்ன சந்தேகம். சன்டிவியில் தானேனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் சன்டிவி ‘GBU’ படத்தை கைமாற்றிவிட்டதாம். சன்டிவியில் நிதி பிரச்னைகள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் ‘GBU’ விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.
News July 5, 2025
கில் பேட்டிங் மாஸ்டர்கிளாஸ்: கங்குலி

இந்தியா- இங்கி., இடையேயான 2வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். இந்நிலையில் இந்திய அணியின் ex கேப்டன் கங்குலி, கில்லின் ஆட்டத்தை மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் எனப் பாராட்டியுள்ளார். இங்கி., மண்ணில் தான் பார்த்ததிலேயே, இதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
News July 5, 2025
புனேயில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் திருப்பம்

புனேயில் கூரியர் பையன் போல் வந்து <<16929359>>பெண்ணை பாலியல் வன்கொடுமை<<>> செய்ததாக எழுந்த புகாரில் இளைஞர் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே பழக்கமானவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. புகார் கூறிய பெண்ணுக்கு மனநல பிரச்னைகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வழக்கில் ஆதாரமாக காட்டப்பட்ட செல்பியை அப்பெண்ணே எடிட் செய்து மிரட்டல் வாசகத்துடன் பரப்பியது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.