News July 28, 2024

விருதுநகர் மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

சிவகாசியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு

image

சிவகாசி பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசு தயார் செய்வதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனை அடுத்து, சிவகாசி பகுதி மாரனேரி சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் கிளியம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது முத்துப்பாண்டி (42) என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் முத்துபாண்டியை கைது செய்தனர்

News March 7, 2026

விருதுநகர்: விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.71 கோடி வரவு!

image

விருதுநகர் மாவட்டத்தில் 3,560 விவசாயிகளின் வங்கி கணக்கில் இதுவரை ரூ.71 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விருதுநகர் மண்டலத்தில் 2025-26 காலகட்டத்தில் 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு கடந்த 4-ம் தேதி வரை 29,796 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ.71,01,20,229 வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

News March 7, 2026

கூமாப்பட்டி: திருமண வீட்டில் தகராறு; பீர் பாட்டிலால் தாக்குதல்

image

கூமாப்பட்டி ஆத்தங்கரைபட்டியை சேர்ந்தவர் சாமி(19). இவர் அங்கு நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று பந்தியில் அமர்ந்து சாப்பிட்ட போது, அருகே அமர்ந்து சாப்பிட்ட இருளப்பன், ரஞ்சித் ஆகியோர் சாமி இலையில் தண்ணீர் பாட்டிலை தள்ளி விட்டுள்ளனர். இதை கேட்ட சாமியை, இருளப்பன் பீர் பாட்டிலால் தாக்கி உள்ளார். ரஞ்சித் கல்லால் எறிந்ததில் பாப்பாத்தி(70)என்ற மூதாட்டி காயமடைந்தார். கூமாப்பட்டி போலீசார் விசாரணை.

error: Content is protected !!