News July 28, 2024

காதி விற்பனை வரலாற்று சாதனை: மோடி

image

காதி விற்பனை முன் எப்போதும் இல்லாத வகையில் 400% உயர்ந்துள்ளதாக மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், காதி மூலம் வரும் வருவாய் 1.5 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார். மேலும், அதிகரித்து வரும் காதி, கைத்தறி விற்பனை புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 4, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (டிச 3) இரவு 10 மணி முதல் நாளை (டிச. 4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் ஊரகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 4, 2025

20 மாவட்டங்களில் பேய் மழை பொளந்து கட்டும்

image

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூர், ராணிப்பேட்டை, தி.மலை, சேலம், குமரி, தேனி, நெல்லை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. எனவே, அவசியமின்றி வெளியே செல்வதை தவிருங்கள்.

News December 4, 2025

சனாதன தர்மத்தை பரப்ப வேண்டும்: பாலய்யா

image

பாலய்யா நடித்து வரும் 5-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ள ‘அகண்டா 2’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்று அவர் பேசும்போது, சனாதன தர்மம் பற்றி அடுத்த தலைமுறையினருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், தர்மத்திற்கு ஆதரவாக, அநீதிகளுக்கு எதிராக செயல்படுவதே சனாதன தர்மம் எனவும் அதை இளைஞர்களுக்கு இந்த படம் கற்று கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!