News July 28, 2024
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் உதவி

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பிபிடிசி தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தர தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தொழிலாளர்களின் அடிப்படை தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை செய்து தருவதாக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
Similar News
News September 13, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (செப்டம்பர் 12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News September 13, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [செப்.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் அசோக் குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News September 12, 2025
கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமீன் மனு விசாரணை

பாளையங்கோட்டை கேடிசி நகரில் ஐடி பொறியாளர் கவின் ஆவண கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைதான சப் – இன்ஸ்பெக்டர் சரவணன் ஜாமீன் கோரி நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் இந்த மனு மீதான விசாரணை வருகிற 15ம் தேதி திங்கட்கிழமை நடைபெற உள்ளது. அன்று ஜாமீன் வழங்குவது குறித்து தெரிய வரும்.