News July 28, 2024
ஆகஸ்ட் 1 முதல் வரும் மாற்றங்கள்

*ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு பிறகு ஐடிஆர் (வருமான வரி) தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
*ஆகஸ்ட் 1 முதல் HDFC கிரெடிட் கார்டு மூலம் CRED, Cheq, MobiKwik, Freecharge போன்ற ஆப்களை பயன்படுத்தி வாடகை செலுத்தினால் 1% பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும்.
*ஆக.1 முதல் கூகுள் நிறுவனம் இந்தியாவில் சேவை கட்டணங்களை 70% வரை குறைக்கிறது. *ஆக.1 முதல் வீட்டு உபயோகம், வணிக சிலிண்டர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News July 4, 2025
நாய்க்கடியை அலட்சியம் செய்யாதீங்க: அரசு எச்சரிக்கை!

நாய்க்கடி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்துவது முக்கியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியும் இருசிறார்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாய் கடித்த இடத்தை முறையாக கழுவாமல் இருப்பது, தாமதமாக சிகிச்சைக்கு வருவது, தடுப்பூசி கால அட்டவணையை மீறுவது ஆகியவை உயிருக்கே ஆபத்தாக மாறும் என தெரிவித்துள்ளது.
News July 4, 2025
கேப்டன் ஆசையில் உள்ளாரா ஜடேஜா?

கோலி, ரோகித், அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வுப் பெற்றுவிட்டனர். இருப்பினும் பும்ரா, கில் போன்ற வீரர்களையே கேப்டானாக பார்த்த தேர்வாளர்கள், ரவீந்திரா ஜடேஜாவை பார்க்க தவறிவிட்டனர். தற்போதுள்ள அணியில் மூத்த வீரர் என்றால் அது ஜடேஜா தான். கேப்டனாக வேண்டும் என ஆசை உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘அந்த கப்பல் கரையை கடந்துவிட்டது’, அதாவது அதற்கான நேரம் முடிந்துவிட்டது என நாசூக்காக சொன்னார் ஜடேஜா.
News July 4, 2025
அஜித் மரண வழக்கு: நீதிபதி தீவிர விசாரணை

அஜித் மரண வழக்கில் மதுரை நீதிபதி 3 நாட்களில் 17 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார். இந்த வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அஜித்தின் தாயார், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.