News July 28, 2024
பும்ரா ஓவரில் ரன்களை குவிப்பது எப்படி? ஜெயசூர்யா

பும்ரா உலகின் மிகவும் தனித்துவமான பவுலர் என இலங்கையின் பயிற்சியாளர் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார். பும்ராவின் திறமையை அனைவரும் மதிக்க வேண்டும் என்ற அவர், அவரால் சிறப்பாக செயல்பட முடியாத நாள்களை பேட்டர்கள் பயன்படுத்தி ரன்களை குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மற்ற வீரர்களை காட்டிலும் பவுலர்கள் எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News July 5, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 5 – ஆனி – 21 ▶ கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: தசமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை.
News July 5, 2025
ஆகஸ்ட் 15ல் குட் பேட் அக்லி… எந்த டிவியில் தெரியுமா?

இதுல என்ன சந்தேகம். சன்டிவியில் தானேனு நீங்க கேட்பது புரிகிறது. ஆனால் சன்டிவி ‘GBU’ படத்தை கைமாற்றிவிட்டதாம். சன்டிவியில் நிதி பிரச்னைகள் இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், விரைவில் ‘GBU’ விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகும் என தகவல்கள் வந்தன. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.
News July 5, 2025
கில் பேட்டிங் மாஸ்டர்கிளாஸ்: கங்குலி

இந்தியா- இங்கி., இடையேயான 2வது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்தார். இது அவரின் முதல் இரட்டை சதமாகும். இந்நிலையில் இந்திய அணியின் ex கேப்டன் கங்குலி, கில்லின் ஆட்டத்தை மாஸ்டர்கிளாஸ் பேட்டிங் எனப் பாராட்டியுள்ளார். இங்கி., மண்ணில் தான் பார்த்ததிலேயே, இதுதான் சிறந்த இன்னிங்ஸ் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.