News July 28, 2024
வரலாற்று உச்சத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $9.69 பில்லியன் அதிகரித்து, 2ஆவது வாரமாக இதுவரை இல்லாத அளவில் $67,086 கோடி என்ற வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஜூலை 19ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு $132.9 கோடி உயர்ந்து, $5,999.2 கோடியாக அதிகரித்துள்ளது. சிறப்பு வரைதல் உரிமம் (SDR) $9.5 கோடி அதிகரித்து $1,820.7 கோடி டாலராக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Similar News
News March 5, 2026
நாதகவை பார்த்து பலருக்கு கண்ண உறுத்துது: சீமான்

இன்று அரசியல் என்பது அரிசியும், பருப்பும், வேட்டியும், சேலையும், ஆயிரமும், ஐநூறுமாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். 100 ரூபாயை கொடுத்துவிட்டு ₹200-க்கு விளம்பரம் செய்வதாக கூறிய அவர், இந்த அரசியலை மாற்ற வேண்டும் என்றார். மேலும், நாதக தனித்து போட்டியிடுவது பலருக்கு கண்ணை உறுத்துகிறது எனவும், கூட்டணி வைக்காமல் எப்படி ஜெயிக்கிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் சவால்விட்டிருக்கிறார்.
News March 5, 2026
யாரோ ஏவி விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்: அமைச்சர்

விஜய் சுயமாக அரசியலுக்கு வரவில்லை; யாரோ ஏவி வந்திருக்கிறார் என்று அமைச்சர் பெரியகருப்பன் விமர்சித்துள்ளார். ஊழலுக்கு எதிரானவர் போல் காட்டிக்கொள்ளும் விஜய், பத்தாண்டுக் காலம் ஆட்சி பொறுப்பில் இருந்து ஊழல் செய்த அதிமுகவை விமர்சிக்கவில்லை; மாநில உரிமையை பறிக்கும் பாஜகவை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தமிழக மக்களுக்கு நன்மை செய்கின்ற திமுகவை மட்டும் தாக்குகிறார் என்று விமர்சித்தார்.
News March 5, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.


