News July 28, 2024

Apply Now: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

image

IBPS தேர்வாணையத்தில் நிரப்பப்படவுள்ள 6,128 (தமிழ்நாட்டில் 665 இடங்கள்) பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. CRP Clerk XIV எழுத்தர் பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: Any Degree, கணினியை இயக்கும் அறிவு, ஆங்கில மொழியறிவு. வயது வரம்பு: 20-28. ஊதியம்: ₹28,000/-. கூடுதல் தகவல்களுக்கு <>IBPS<<>> இந்த முகவரியை கிளிக் செய்யவும்.

Similar News

News December 4, 2025

உஷாரான செங்கோட்டையன்.. தவெகவில் 3 தலைவர்கள்?

image

EX MLA சின்னசாமியுடன் செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தபோதே, இடையில் நுழைந்த செந்தில் பாலாஜி, அவரை தட்டித்தூக்கி திமுகவில் இணைத்ததாக கூறப்படுகிறது. இதுபோல் இனி நடந்துவிடக் கூடாது என உஷாரான செங்கோட்டையன், சென்னை, டெல்டா, கொங்குவை சேர்ந்த 3 முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அவர்கள் விரைவில் தவெகவில் இணையவிருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News December 4, 2025

தங்கம் விலை இப்படி மாறியிருக்கே!

image

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $22 உயர்ந்து, $4,211.56-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டு வருகிறது. நேற்று (டிச.4) மட்டும் சவரனுக்கு ₹160 உயர்ந்து, ₹96,480-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News December 4, 2025

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் BJP செய்யும் சூழ்ச்சி: காங்., MP

image

பாஜகவின் வேலையே மதங்களுக்கு இடையே சூழ்ச்சி செய்வதுதான் என MP சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக சூழ்ச்சிகளுக்கு TN இடமளிக்கக்கூடாது என்ற அவர், இங்கிருக்கும் கலாசாரம் வேறு என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் கலாசாரமாக தமிழ் கலாசாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!