News July 28, 2024
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

திண்டுக்கல் வருவாய் கோட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் 31.07.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
திண்டுக்கல்: தட்டித்தூக்கிய அமைச்சர்

திண்டுக்கல், N.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இமாக்குலின் ஷர்மி. இவர் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய துணை சேர்மனும் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆதரவாளர். இந்நிலையில் நேற்று மாலை திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
News March 5, 2026
திண்டுக்கல்லில் பரபரப்பு; கத்திக்குத்து சம்பவம்!

திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியில் கொத்தனார் வேளாங்கண்ணி (39) மற்றும் கிஷோர்வசந்த் (21) இடையே குடிபோதையால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த கிஷோர்வசந்த், 17 வயது சிறுவன் ஆகிய இருவர் வேளாங்கண்ணியை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த வேளாங்கண்ணி சிகிச்சைக்காக திண்டுக்கல் GH-ல் சேர்க்கப்பட்டார். நகர் தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 5, 2026
பழனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கருப்புசாமி (33). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.


