News July 28, 2024
30 நாள்களில் 87 தமிழக மீனவர்கள் கைது

ஜூன் 25இல் நாகை மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அதை தொடர்ந்து, 25 ராமேஸ்வரம் மீனவர்கள் உள்பட 77 பேர் அடுத்தடுத்து 30 நாள்களில் கைது செய்யப்பட்டனர். கைதை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தியும், மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் வந்த நிலையில் இது நடந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது அப்பகுதி மீனவர்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
Similar News
News March 25, 2026
மகிழ்ச்சியான மனநிலைக்கு சிறந்த பழக்கங்கள்!

➤விருப்பமான செயலை செய்யும்போது அவசரப்படாமல் ரசித்து செய்யுங்கள். ➤சிறிய தருணங்களை ரசிப்பது. ➤சாகச பயணங்கள் மேற்கொள்ளுங்கள். ➤உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ➤தினமுன் நன்றாக தூங்குங்கள். ➤தினமும் சிறிதுநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். ➤நண்பர்கள், உறவினர்களுடன் அவ்வப்போது பேசுதல். ➤உங்களுக்கென அதிக நேரத்தை ஒதுக்குங்கள்.
News March 25, 2026
விஜய் விவகாரம்.. சமுத்திரக்கனி விளக்கம்

விஜய் குறித்து பேசியது தொடர்பாக சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். தனக்கு மனதில் ஒன்று வைத்துக்கொண்டு வெளியே ஒன்று பேசத் தெரியாது என்று கூறிய அவர், அது ஒரு அக்கறை, வலி மற்றும் என் மனதில் பட்டதாக நான் பார்க்கிறேன் என்றார். மேலும், வீடியோ எடுக்கும்போதே தனக்கு தெரியும் என்றும், வீடியோவுக்கு மானே தேனே போட்டு தம்பிகள் வேற வேலையை பாத்துடாங்க எனவும் தெரிவித்தார்.
News March 25, 2026
சர்தார் வல்லபாய் பொன்மொழிகள்

➤கடின உழைப்பும் தியாகமுமே வெற்றியின் அடித்தளம். அவை இல்லாமல், மிகப்பெரிய கனவுகள் கூட நிறைவேறாமல் போய்விடும். ➤முயற்சியில் காட்டும் நிலைத்தன்மையும் மனவுறுதியும், சாதாரணச் செயல்களை அசாதாரணச் சாதனைகளாக உருமாற்றுகின்றன. ➤நாம் சமத்துவ உணர்வை வளர்த்து, தீண்டாமையை ஒழிக்க வேண்டும். ➤இன்பமும் துன்பமும் காகிதப் பந்துகள் போன்றவை.


