News July 28, 2024
ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பெரும்பாறை மேல்நிலைப்பள்ளியில் ஒரு முதுநிலை இயற்பியல் ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. இதற்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணி செய்ய விருப்பமுள்ள நபர்கள் உரிய கல்விச்சான்றுகளுடன் திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஜீலை.31 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
திண்டுக்கல்: Spam Calls தொல்லையா? இனி END CARD!

திண்டுக்கல் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க!
News March 11, 2026
வத்தலக்குண்டு: தட்டித்தூக்கிய அதிமுக Ex அமைச்சர்!

வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, மணிப்பிள்ளை, ஓ.இளங்கோவன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விஸ்வநாதன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
News March 11, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை பதிவு

திண்டுக்கல் மாவட்ட காவல் காவல்துறை சார்பில் இணையதளத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் “உங்கள் செல்போன் எண்ணிற்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்.” பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த கார்ட்டூன் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


