News July 28, 2024
மாமியாருடன் தகாத உறவு – மருமகன் கைது

பத்துகாடு விடுதியை சேர்ந்தவர் சின்னகுழந்தை (49). இவருக்கும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பெண்ணின் மருமகன் விஜயகுமார் தனது மாமியாரை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பெண்ணை தேடி வந்த சின்னகுழந்தையை விஜயகுமார் கட்டையால் அடித்து கொலை செய்து உடலை செப்டிக் டேங்கில் மறைத்துள்ளார்.
Similar News
News March 12, 2026
தஞ்சை: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News March 12, 2026
தஞ்சை: அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்பிடி, அதிமுக சார்பில் சோழபுரம் கடைவீதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில் தலைமை பேச்சாளர் துகிலி நல்லிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகளுக்கு சேலை வழங்கினர்.
News March 12, 2026
தஞ்சை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெற தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுகோட்டை, ஒரத்தநாடு பேராவூரணி, பாபநாசம் வருவாய் அலுவலகத்திலும் இன்று (மார்ச் 12) நடைபெறும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்ட முகாம்களில், பொதுமக்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


