News July 28, 2024
வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் தேவை!

நாட்டில் வெள்ள மேலாண்மைக்கு விரிவான செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என மத்திய அரசை நாடாளுமன்றக் குழு வலியுறுத்தியுள்ளது. வெள்ளக் கட்டுப்பாடு & முன்னறிவிப்புத் திட்டங்களின் செயல்திறன் தணிக்கை தொடா்பான அக் குழுவின் அறிக்கை, 18ஆவது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வெள்ள அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் டெலிமெட்ரியை நிறுவுவதில் நிலவும் தாமதம் குறித்து அந்தக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
Similar News
News March 7, 2026
குமரியில் மேலும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்!

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
News March 7, 2026
தவெக தான் எதிர்க்கட்சி: ஜோதிமணி

2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என ஜோதிமணி கூறியுள்ளார். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் எதிர்க்கட்சியாக தவெக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், TN-ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அதிமுக சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் எனவும் பேசியுள்ளார்.
News March 7, 2026
தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


