News July 28, 2024

ரேஷன் அரிசி கடத்தல்: புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு

image

ஈரோட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 5950, ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 94981 68363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 80726 28234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 94981 75888 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 15, 2025

ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

image

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

News August 15, 2025

ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

image

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 15, 2025

ஈரோட்டில் பெண்ணிடம் நகை பறிப்பு!

image

ஈரோடு: பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த நந்தினி கடந்த 25ஆம் தேதி வெளியே சென்ற போது ஒருவர் இவருடைய நகையை பறித்து சென்றார். சூரம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகை பறித்த திருடனை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று(ஆக.14) பெங்களூரில் பதுங்கி இருந்த ஜே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!