News July 28, 2024
போலந்து செல்லும் பிரதமர் மோடி?

பிரதமர் மோடி ஆக. 23ஆம் தேதி 2 நாள் அரசு முறை பயணமாக உக்ரைன் செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து போலந்து நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை போலந்து சென்றால் 40 ஆண்டுகளில் அந்நாட்டுக்குச் செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி இருப்பார். இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Similar News
News March 12, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கண் அழியாமை ▶குறள் எண்: 630 ▶குறள்: இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. ▶பொருள்: துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும்.
News March 12, 2026
போர் முடிவுக்கு வர ஒரே வழி இதுதான்: ஈரான்

ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் போர் நிலைமை குறித்து விவாதித்ததாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பிராந்திய அமைதியை நிலைநாட்ட ஈரான் உறுதிபூண்டுள்ளது என்றார். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, ஈரான் விதித்த நிபந்தனைகளை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்க வேண்டும் என்பதுதான் ஒரே வழி என்றும், ஈரானின் சட்டபூர்வமான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


