News July 28, 2024
6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்

3 மாநில ஆளுநர்களை மாற்றம் செய்தும், 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை ஜனாதிபதி முர்மு ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் மற்றும் தெலங்கானா ஆளுநராக இருந்து வந்த சி.பி. ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா ஆளுநராகவும், முன்னாள் ஐஏஎஸ் கைலாசநாதன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News March 24, 2026
திருவள்ளூர்: ‘9445030725’ இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்
News March 24, 2026
வீட்டு சிலிண்டர்.. அரசின் மகிழ்ச்சி செய்தி

இந்தியாவுக்கு LPG கொண்டுவரும் பைன் கேஸ், ஜக் வசந்த் <<19460896>>கப்பல்கள் ஹார்முஸ்<<>> நீரிணையை கடந்துள்ளன. சுமார் 92,000 டன் LPG-ஐ சுமந்து வரும் இந்த கப்பல்கள் அடுத்த 4 நாள்களுக்குள் இந்தியா வந்தடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஷிவாலிக், நந்தா தேவி மற்றும் ஜக் லட்கி ஆகிய கப்பல்கள் இந்தியா வந்துள்ள நிலையில், விரைவில் வீட்டு சிலிண்டர் தட்டுப்பாடு கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 24, 2026
சட்டமன்றத் தேர்தல்: EPS-ன் அடுத்த திட்டம்!

சட்டப்பேரவை தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பிரசாரத்தை நாளை முதல் EPS தொடங்குகிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள மந்தைவெளி பகுதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரம் செய்யவுள்ளார். அடுத்தடுத்த நாள்களில் ஆலந்தூர், தாம்பரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், நாகர்கோவில், ராதாபுரம், கடையநல்லூர், கோவில்பட்டி, சிவகாசி, பரமக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


