News July 28, 2024
தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

முல்லை பெரியாறு பிரதான பாசன கால்வாய் பகுதியில் முதல் போக விவசாயம் செய்வதற்கு கடந்த 3ஆம் தேதி முதல் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பாசன கால்வாய் மூலம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சார்பில் 16,452 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது திறந்து விடப்பட்ட நீரை நம்பி பல்வேறு விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது நெற்பயிருட்டு தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் குறித்து விசாரணைசெய்து வருகின்றனர்.
News March 3, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (03.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 3, 2026
மதுரை : சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

மதுரை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


