News July 28, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜூலை 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

Similar News

News March 10, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி (81) உடல்நலக்குறைவால் காலமானார். 1970 முதல் அசாமின் திப்பு லோக்சபா தொகுதியில் இருந்து 5 முறை MP-ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News March 10, 2026

மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

image

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.

News March 10, 2026

விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

image

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.

error: Content is protected !!