News July 27, 2024
சிறப்பு கிராம சபை கூட்டம்

ஈரோட்டில் வரும் 30ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார். இதில், ஈரோடு மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற, திட (ம) திரவக் கழிவு மேலாண்மை உறுதி செய்யும் பொருட்டு 28 கிராம ஊராட்சிகளை ரைசிங் நிலைக்கும், 119 கிராம ஊராட்சிகளை ஓடிஎப் பிளஸ் மாடல் நிலைக்கு கொண்டு செல்ல கிராம சபை நடைபெறவுள்ளது.
Similar News
News August 15, 2025
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினவிழா

ஈரோடு மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா நடைபெறுகிறது. காலை 9:05 மணிக்கு கலெக்டர் கந்தசாமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின், அணிவகுப்பு மரியாதை, சுதந்திர போராட்ட தியாகிகள், வாரிசுகள் கவுரவிப்பு, சிறந்த அரசு பணியாளர்கள் பாராட்டு, நலத்திட்ட உதவி, அரசு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
News August 15, 2025
ஈரோடு: B.E முடித்தால் சூப்பர் வேலை!

ஈரோடு: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த <
News August 15, 2025
ஈரோட்டில் பெண்ணிடம் நகை பறிப்பு!

ஈரோடு: பழையபாளையம் இந்திரா காந்தி வீதியைச் சேர்ந்த நந்தினி கடந்த 25ஆம் தேதி வெளியே சென்ற போது ஒருவர் இவருடைய நகையை பறித்து சென்றார். சூரம்பட்டி போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நகை பறித்த திருடனை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று(ஆக.14) பெங்களூரில் பதுங்கி இருந்த ஜே.பி நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பவரை போலீசார் கைது செய்து நகையை மீட்டு சிறையில் அடைத்தனர்.