News July 27, 2024

பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை வெற்றி

image

பாரிஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய இணை வெற்றி பெற்றுள்ளது. சி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் இணை, முதல் போட்டியில் பிரான்ஸின் கோர்பி, லேபர் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய இணை, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் இணையை வீழ்த்தியது. அடுத்த சுற்று நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

Similar News

News December 3, 2025

தியேட்டரில் ரொமான்ஸ் செய்த ஜோடிகள்.. வீடியோ வைரல்

image

கேரளாவில் தியேட்டரில் காதல் ஜோடிகள் ரொமான்ஸ் செய்த வீடியோக்கள் டெலிகிராம், X தளத்தில் வைரலாகி வருகிறது. அரசு நடத்தும் தியேட்டர்களின் CCTV காட்சிகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இதனை எளிதில் ஹேக் செய்துவிடுவதாக நிபுணர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதேநேரத்தில், தியேட்டரில் காதல் ஜோடிகள் அத்துமீறுவது சரியல்ல என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

News December 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து அனுப்புங்க

image

இன்று (டிச.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News December 3, 2025

தகுதியற்ற விமானத்தை இயக்கிய ஏர் இந்தியா

image

காலாவதியான லைசென்ஸை கொண்ட ஏர்பஸ் A320 என்ற விமானத்தை, கடந்த மாதம் 8 முறை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கியுள்ளது. இந்த விதிமீறல் ஆய்வின் போது கண்டறியப்பட்ட நிலையில், அஜாக்கிரதையாக செயல்பட்ட அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பயணிகள் பாதுகாப்பில் மெத்தனம் காட்டப்பட்டது எப்படி என்பது தொடர்பாக DGCA தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

error: Content is protected !!