News July 27, 2024
SJ சூர்யாவின் போஸ்டரை வெளியிட்ட LIK படக்குழு

எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 20ஆம் தேதி `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (LIK) படக்குழு எந்த போஸ்டரையும் வெளியிடாத நிலையில், இன்று அட்டகாசமான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து, எஸ்ஜே சூர்யா அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் மூலம், பிரதீப்-க்கு தொல்லை கொடுக்க போகும் பாஸாக அவர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.
Similar News
News March 6, 2026
ஒரேநாளில் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிவில் இருந்து மீண்ட நிலையில், இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளன. சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் குறைந்து 78,018-க்கும், நிஃப்டி 314 புள்ளிகள் குறைந்து 24,450-க்கும் வர்த்தகமாகின. ICICI Bank, HDFC, SBI,
Bharti Airtel போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன. அதேசமயம், Reliance, ONGC, Sun Pharma, NTPC நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
News March 6, 2026
எண்ணெய் இறக்குமதிக்கு US ஒப்புதல் தேவையா? CM

ரஷ்யாவிடமிருந்து 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில், சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை என CM ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், <<19303157>>ஈரான் கப்பல்<<>> இந்திய கடற்பரப்பிற்கு அருகே தாக்கப்பட்ட விவகாரத்தில் நாம் அமைதி காப்பது சரியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
தமிழக தேர்தல் தேதி.. வெளியானது HINT

தமிழகத்தில் எப்போது தேர்தல் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், தேர்தல் தேதி குறித்து பாஜகவின் பி.எல்.சந்தோஷ் HINT கொடுத்துள்ளார். சென்னையில் பாஜக வெளிமாநில பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘தமிழகத்தில் ஏப்.15-க்கு பிறகு தொண்டர்கள் மற்ற வேலைகளை பார்க்கலாம்; அதுவரை தேர்தல் வேலைகளை பார்க்க வேண்டும்’ என தேர்தல் தேதி பற்றி சூசகமாக தெரிவித்துள்ளார்.


