News July 27, 2024
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு 10 மணி வரை) 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே செல்வோர், வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக செல்லவும்.
Similar News
News March 8, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் விஜய்? பரபரப்பு தகவல்

அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் விஜய்யை கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், விஜய்யை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருகிறாரா? இல்லையா என்பதை தெரிந்துகொண்டு தொகுதிப்பங்கீடு தொடர்பான முடிவை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
News March 8, 2026
நகைக்கடன் தள்ளுபடி… வெளியானது மகிழ்ச்சி செய்தி

திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் மாநாட்டில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை CM ஸ்டாலின் வெளியிடவுள்ளதாக அமைச்சர் K.N.நேரு தெரிவித்துள்ளார். இதனால், எந்த மாதிரியான அறிவிப்பு வெளியாகும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், நகைக் கடன் தள்ளுபடி, மகளிருக்கு இலவச மானிய சிலிண்டர், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News March 8, 2026
அரசியல் அடிப்படை மாறணும்: சீமான்

தமிழக அரசியலில் அடிப்படை மாற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்திய கட்சிகளுக்கு மும்மொழி, திராவிட கட்சிகளுக்கு இருமொழி, எங்களுக்கு (நாதக) தமிழ் மொழிதான் கொள்கை என்று தெரிவித்துள்ளார். ஆள், மாற்றம், ஆட்சி மாற்றம் வேண்டாம், அரசியல் அடிப்படை மாற வேண்டும் எனக் கூறிய அவர், சகித்து சகித்து அடிமையாக உள்ளோம்; புரட்சியால்தான் அனைத்தையும் மாற்ற முடியும் என்றார்.


