News July 27, 2024
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்த நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Similar News
News March 10, 2026
அறிவித்தார் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்டத்தில் இரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் சிறுதானிய உணவுத் திருவிழா இன்று (மார்ச் 10) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விற்பனையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என சேலம் கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 10, 2026
சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (09.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 9, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.


