News July 27, 2024
திருடுபோன ஸ்மார்ட்போனை இப்படி முடக்கலாம்

கணினி காலத்தில் கடவுச்சொல், முக்கிய தகவல்களை ஸ்மார்ட் போன்களில் சேமித்து வைக்கும் வழக்கம் பலரிடம் உள்ளது. அந்த ஸ்மார்ட்போனை யாரேனும் திருடி விட்டால் முக்கியத் தகவல் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, திருடுபோன ஸ்மார்ட்போனை எளிதில் முடக்க வசதியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறையின் 14422 எண்ணைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தால் உடனே முடக்கப்பட்டு விடும்.
Similar News
News December 3, 2025
நெல்லை: ரூ.5 லட்சம், 1 பவுன் தங்கம் வேண்டுமா? ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இந்த விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கு விருது பெற தகுதி உள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News December 3, 2025
உலக தலைவர்கள் பயணிக்கும் விமானங்கள் PHOTOS

உலக நாடுகளின் அதிபர், பிரதமர் போன்ற மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்யும்போது உயர் பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம். இதற்காக, அவர்களுக்கு சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தெந்த நாடுகள் என்ன விமானங்களை பயன்படுத்துகின்றன மற்றும் அதன் பெயர் என்ன ஆகியவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 3, 2025
மீண்டும் சதம் அடித்து அசத்திய விராட் கோலி

இக்கட்டான நிலையில் களமிறங்கிய விராட் கோலி SA-வுக்கு எதிரான ODI தொடரில் 2-வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட், 70 ரன்களை கடந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் சதம் அடித்து இந்தியா 350 ரன்களை எட்ட உதவியது போல், இதிலும் இமாலய இலக்கை எட்ட தொடர்ந்து விளையாடி வருகிறார்.


