News July 27, 2024
வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்க திட்டம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், காவல் துறை அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் முடிவெடுத்துள்ளது. மேலும், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வழக்கறிஞர்களை பார் கவுன்சிலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 20 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News September 20, 2025
“சென்னை ஒன்று” செயலியை தொடங்கி வைக்கும் முதல்வர்

இந்தியாவில் முதல்முறையாக பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில், கேப்/ஆட்டோ ஆகியவற்றை இணைக்கும் “சென்னை ஒன்று” (CHENNAI ONE) செயலியை வரும் செ.22 முதல்வர் முக.ஸ்டாலின் சென்னையில் அறிமுகப்படுத்துகிறார். இச்செயலி மூலம் ஒரே QR சீட்டு மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணிக்கலாம்; UPI மற்றும் கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம். இந்த செயலி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கும்.
News September 20, 2025
சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் வரும் (செ.22) நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் காரணமாக பல்வேறு சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 08.00 மணி முதல் வால்டாக்ஸ் சாலை, என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். மாலை 03.00 மணி முதல் யானைக்கவுனி பாலம் மற்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.