News July 27, 2024

13 மாவட்டங்களில் மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இரவு 7 மணிவரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, குமரியில் இடி, மின்னலுடன் மழை பெய்யலாம் என கணித்துள்ளது. இதனிடையே, கரூர், தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்குவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News

News March 22, 2026

உத்திரமேரூரில் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம்: உத்திரமேரூர், பெருநகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(78). விவசாயியான இவர், நேற்று முன் தினம் தனது மகன் ரவியுடன் பைக்கில் அவருக்கு சொந்தமான வயலுக்குச் சென்றனர். தந்தையை இறக்கி விட்ட ரவி, மீண்டும் உணவு வழங்க திரும்பிய போது, கார்த்திகேயன், மின் ஒயரில் சிக்கி, மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 22, 2026

10 மணி நேரமாக தொடர்ந்த CPM ஆலோசனை கூட்டம்

image

கடந்த முறையை விட (6) குறைவான தொகுதிகளை ஏற்க மறுக்கும் CPM, தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. நேற்று சென்னையிலுள்ள CPM அலுவலகத்தில் காலையில் தொடங்கிய அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டம் 10 மணிநேரத்தை கடந்தும் நடைபெற்றது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில், திமுக கூட்டணியை விட்டு CPM <<19437900>>வெளியேறும் <<>>முடிவில் உள்ளதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!