News July 27, 2024

ஹசரங்காவின் சுழலில் இருந்து தப்பிப்பாரா சஞ்சு சாம்சன்?

image

இலங்கைக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ஆடும் லெவனில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றால், இலங்கையின் ஸ்பின்னர்களை அவர் சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கை அணியில் ஹசரங்கா மற்றும் தீக்ஷனா இருவரும் சிறப்பாக பந்து வீசக்கூடியவர்கள். குறிப்பாக, ஹசரங்காவிற்கு எதிராக 11 பந்துகளை எதிர்கொண்டுள்ள சஞ்சு, 3 முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Similar News

News March 20, 2026

NDA-வா? அதிமுக கூட்டணியா? TTV தினகரன் விளக்கம்

image

தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைமை அதிமுகவா பாஜகவா என திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனிடையே, டெல்லி அனுமதியுடனே அதிமுக செயல்படுவதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இந்நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம்பெற்றிருக்கிறது என்று TTV தினகரன் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணி என்பது பாஜக தலைமையிலான கூட்டணி என்பதை CM-க்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 20, 2026

19 சீசன்கள்.. IPL-ன் அசைக்க முடியாத 4 ஜாம்பவான்கள்!

image

2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட IPL-ன் அனைத்து சீசன்களிலும்(19 சீசன்கள்) 4 பேர் மட்டுமே விளையாடியுள்ளனர். தோனி(CSK, PWI), ரோஹித் சர்மா(MI, DCH), விராட் கோலி(RCB) ஆகியோருடன் இந்த லிஸ்ட்டில் மனிஷ் பாண்டேவும்(RCB, SRH, DC, PWI, MI, LSG, KKR) உள்ளார். இதில், அனைத்து சீசனிலும் ஒரே அணிக்காக விளையாடிய வீரராக விராட் கோலி மட்டுமே உள்ளார். ரஹானே, ஜடேஜா ஆகியோர் 18 சீசன்களில் விளையாடியுள்ளனர்.

News March 20, 2026

புதுச்சேரியில் தவெக கூட்டணி முடிவு மாறியது!

image

தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தவெக தனித்து போட்டி என்ற முடிவை எடுத்துள்ளது. அங்கு, ஆளும் NR காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தவெக 9 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இதனால், இன்று (அ) நாளை 30 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளாராம்.

error: Content is protected !!