News July 27, 2024
மம்தாவுக்கு அனுமதி மறுப்பு: முதல்வர் கண்டனம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மம்தாவை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஜனநாயகத்தின் அங்கம் என்பதை புரிந்துக்கொள்ளுமாறு அறிவுறுத்திய அவர், இதுதான் மாநில முதல்வரை நடத்தும் விதமா? என்றும் கேள்வி எழுப்பினார். சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேசவிட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா குற்றஞ்சாட்டியதை மேற்கோள் காட்டி அவர் கண்டித்துள்ளார்.
Similar News
News March 14, 2026
CM ஸ்டாலின் ₹2,000 கொடுப்பார்: அப்பாவு

வரும் தேர்தலில் திமுக குறைந்தபட்சம் 53% வாக்குகளுடன் வெற்றி பெறும் என அப்பாவு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர், TN மக்கள் எப்போது தேர்தல் வரும், எப்போது CM ஸ்டாலினுக்கு நன்றிக்கடனாக வாக்களிக்கலாம் என காத்திருக்கிறார்கள் என்றார். மீண்டும் CM ஆக ஸ்டாலின் ஆட்சியில் அமர்வார் என்றும், அப்போது உரிமை தொகையாக ₹1,000 கொடுக்க மாட்டார், ₹2,000 கொடுப்பார் எனவும் கூறினார்.
News March 14, 2026
வீட்டு சிலிண்டர்.. இரவில் வந்த மகிழ்ச்சி அறிவிப்பு

கேஸ் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தும் மக்களிடம் அச்சம் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் 75.7 லட்சம் கேஸ் புக்கிங் நடைபெற்றுள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. சராசரியாக 50 லட்சம் புக்கிங் நடக்கும் நிலையில், இது 30% அதிகம் என கூறியுள்ளது. மேலும், மக்களின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு எரிபொருள் இருப்பதாகவும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
News March 14, 2026
காலி மதுபாட்டில்கள்.. அரசுக்கு கோர்ட் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை TN அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என சென்னை HC உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில், டாஸ்மாக் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் இத்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த இயலவில்லை என அரசு வாதிட்டது. ஆனால், திட்டத்தை மே 31-க்குள் அமல்படுத்த வேண்டும். தவறினால் பாட்டிலுக்கு ₹10 அபராதம் விதிக்கப்படும் என்று கோர்ட் எச்சரித்துள்ளது.


