News July 27, 2024

திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்த வைத்திலிங்கம்

image

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற வைத்த வைத்தியலிங்கம் எம்.பி. இன்று சென்னையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆனந்தராமன், கார்த்திகேயன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Similar News

News March 10, 2026

புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு <<>>கிளிக் செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News March 10, 2026

புதுவை: என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

காரைக்கால் வடக்கு தொகுதி கீழகாசாக்குடி, காளியம்மன் கோவில் தெரு, காலனி தெரு, வடக்கு தெரு மற்றும் தெற்கு தெருவைச் சார்ந்த இளைஞர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் மற்றும் அமைச்சர் திருமுருகனை அவரது அலுவலகத்தில் சந்தித்து தங்களை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

News March 10, 2026

புதுவை: ரயிலில் கடத்த முயன்ற மது பாட்டில்கள்!

image

புதுவையில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சூரத்குமார் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 பைகள் மட்டும் தனியாக இருந்துள்ளது. அந்த பைகளை சோதனை செய்தபோது ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!