News July 27, 2024
அரிசி விலை மேலும் உயரும் அபாயம் 1/2

25 கிலோ எடைக்கும் கூடுதலாக உள்ள அரிசி மூட்டைகளுக்கும் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதால், சில்லறை விலையில் அதன் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் உள்ள அரிசி உள்ளிட்ட உணவுப்பொருள்களுக்கு தற்போது 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு பெறும் வகையில் அரிசி விற்பனையாளர்கள் தற்போது 26 கிலோ எடை மூட்டையில் அவற்றை விற்பனை செய்கின்றனர்.
Similar News
News March 11, 2026
பங்குச்சந்தைகள் மளமளவென சரிந்தது.. ₹8 லட்சம் கோடி LOSS!

LPG தட்டுப்பாடு விவகாரம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது. சென்செக்ஸ் 1,080 புள்ளிகள் சரிந்து 77,100 ஆகவும், நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 24,007 ஆகவும் மளமளவென குறைந்துள்ளது. இதனால், இன்று சுமார் ₹8 லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், IOC, BPC, HPC உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் பங்குகள் 2% வரை அதிகரித்துள்ளது.
News March 11, 2026
ரோட்டில் இருந்த குழியால் நடந்த Medical Miracle… எப்புட்ரா!

மூளைச்சாவு அடைந்ததால் உயிர்பிழைப்பது கடினம் என டாக்டர்களால் கைவிடப்பட்ட பெண், மீண்டும் நலமுடன் வந்த சுவாரஸ்ய சம்பவம் உ.பி.யில் நிகழ்ந்துள்ளது. இறக்கும் தருவாயில் இருந்த வினிதா சுக்லாவை வீட்டிற்கு அழைத்து சென்றபோது, ரோட்டில் இருந்த ஒரு பள்ளத்தில் ஆம்புலன்ஸ் இறங்கி ஏறியிருக்கிறது. இந்த அதிர்வால் இதயத்துடிப்பு சீராகியுள்ளது. இந்த நிகழ்வு ஒரு Medical Miracle என டாக்டர்கள் கூறிவருகின்றனர்.
News March 11, 2026
கறார் காட்டும் திமுக… தீவிர ஆலோசனையில் வைகோ

திமுக – மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிமுகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும், அதுவும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக கூறிவிட்டதாம். இதுகுறித்து முடிவெடுக்கவும், 4 தொகுதிகள் ஒதுக்கினால், யார் யாரை வேட்பாளராக களமிறக்கலாம் என்பது குறித்தும், தற்போது நிர்வாகிகளுடன் வைகோ ஆலோசித்து வருகிறார்.


