News July 27, 2024
தொடர் உண்ணாவிரதம் எம்எல்ஏ அறிவிப்பு

களியக்காக்களை அருகே கோழி விளை பகுதியில் 4823 என்ற எண்ணுடைய பாருடன் கூடிய டாஸ்மாக் இயங்கி வருகிறது. இதன் அருகில் ஆலயம், கோவில், பள்ளிவாசல், மருத்துவமனை அரசு, தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நெருக்கடியான இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட கோரி நாளை மறுநாள் (ஜூலை-29) முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க போவதாக கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
குமரி: இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

கட்டி மாங்காடு அருகே அரசர்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சோபி (28). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்து 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சோபி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆனதால் சோபி தற்கொலை குறித்து பத்மநாபபுரம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார்.
News March 8, 2026
குமரி: விஷம் குடித்து கொத்தனார் தற்கொலை

கருங்கல் அருகே பாலூர் கிளி மூக்கு விளைபகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). கொத்தனாரான இவர் நேற்று காலை வீட்டில் பூச்சி கொல்லி மருந்தை எடுத்துக் குடித்தார். இதில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 7, 2026
குமரி: குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்துக்குட்பட்ட தெரிசனங்கோப்பு பகுதியில் உள்ள ஆற்றில் இன்று மதியம் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


