News July 27, 2024

அச்சரப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ மறைவு

image

செங்கல்பட்டு நகரத்தின் மூத்த வழக்கறிஞரும், அச்சரப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சி.கணேசன் வயது முதிர்வின் காரணமாக நேற்று(ஜூலை 26) மாலை இறந்தார். இவரின் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வடக்குபட்டு கிராமத்தில் உள்ள இல்லத்தில், பொதுமக்களின் அஞ்சலிக்காக கணேசன் வைக்கப்பட்டுள்ளது. MGR ஆட்சி காலத்தில் 1980 – 84 ஆம் ஆண்டு அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தார்.

Similar News

News August 12, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டம் இன்று (ஆகஸ்ட் 12) செங்கல்பட்டு மாமல்லபுரம் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணி செய்யும் காவலர்கள் விவரம் கீழே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுவார் பொதுமக்கள் ஏதேனும் அவசர தேவை என்றால் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். இரவு பணி செய்யும் பெண்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள்.

News August 12, 2025

விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

image

வரும் ஆகஸ்ட் 15, 16, மற்றும் 17 ஆகிய நாட்களில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. வண்டலூரை அடுத்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் வசதிக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News August 12, 2025

செங்கல்பட்டில் ஆசிரியர் வேலை… இன்றே கடைசி!

image

தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழ், ஆங்கிலம், கணிதம், வரலாறு, இயற்பியல் உள்ளிட்ட 12 பாடப் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. PG டிகிரி + B.Ed முடித்தவர்கள் இதற்கு இன்றைக்குள் (ஆகஸ்ட் 12) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 1800 425 6753 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.<> இந்த லிங்கில்<<>> அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கும் இணையதளம் இருக்கு. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!