News July 27, 2024

விவசாயிகளின் கோரிக்கைகளை தீர்க்க ஆட்சியர் உத்தரவு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள், நாய்களால் கால்நடைகள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஏரி மதகுகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் மற்றும் பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு விரைவில் நிவாரண இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News March 6, 2026

பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

image

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 6, 2026

பெரம்பலூர்: போலி அறக்கட்டளை நடத்திய 3 பேர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் “VAO (Vigilance Awareness Organizations)” என்ற பெயரில் போலியான அறக்கட்டளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த செல்லம் (55), தேவக்குமார் (55), பார்த்தசாரதி (35) ஆகிய மூன்று நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 5, 2026

பெரம்பலூர்: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️பெரம்பலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04328-296206
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!