News July 27, 2024

இன்றே கடைசி: RBI வேலைக்கு விண்ணப்பித்து வீட்டீர்களா?

image

“கிரேட் பி” நிலையில் 94 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை RBI வெளியிட்டிருந்தது. அதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <>https://www.rbi.org.in/<<>> தளத்தில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 21- 30 வரையிலும், கல்வித் தகுதி பொருளாதாரத்தில் இளநிலை & முதுநிலை, புள்ளியியல், முதுநிலை பட்டமும் கோரப்பட்டுள்ளது. முதலில் எழுத்துத் தேர்வும், பிறகு நேர்முகத் தேர்வும் நடத்தப்படும்.

Similar News

News April 6, 2026

பிரம்மோஸ் ஏவுகணை நாயகன் காலமானார்!

image

அதிவேக ஏவுகணையான ஸிர்கான் மற்றும் இந்திய-ரஷ்ய பிரம்மோஸ் என்ஜி ஏவுகணையின் வடிவமைப்பாளரான அலெக்சாண்டர் லியோனோவ் (74) உயிரிழந்தார். அவரது மரணத்திற்கான காரணத்தை ரஷ்ய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. டெல்லியை தளமாக கொண்ட பிரம்மோஸ் ஏரோஸ்பேஸின் ரஷ்ய கூட்டு நிறுவனப் பங்காளியான NPOMASH நிறுவனத்தின் CEO ஆகவும் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2026

ஏப்ரல் 6: வரலாற்றில் இன்று

image

▶ 1919 – மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தார். ▶1930 – மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை முடித்து, கையளவு உப்பை எடுத்து ’நான் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்’ என அறிவித்தார். ▶1973 – திரைப்பட நடிகர் பிரசாந்த் பிறந்தநாள். ▶1815 – தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்தநாள். ▶2011 – திரைப்பட நடிகை சுஜாதா நினைவுதினம். ▶2021 – பெரியாரிய அறிஞர் வே.ஆனைமுத்து நினைவு தினம்.

News April 6, 2026

மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்: லோகேஷ்

image

ராசிபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக அதிமுக Ex சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அங்கு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், மாமன்னன் மகன் நான் நிற்கிறேன்; DCM நடித்த கேரக்டர் நான் தான் என பேசினார். அடுத்த 15 நாட்களில் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவோம். இந்த முறை தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் வண்ணமே மாறும் என கூறியுள்ளார். <<-se>>#TNElection2024<<>>

error: Content is protected !!