News July 27, 2024

சனிதோஷத்தை போக்கும் ஆடி சனிக்கிழமை வழிபாடு

image

ஆடி வெள்ளி மட்டுமில்லை, ஆடி சனிக்கிழமைக்கும் பல சிறப்புகள் இருப்பதாக ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடும், சனிக்கிழமை சனி பகவானின் வழிபாடும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. சனி தோஷம் உள்ளவர்கள், ஆடி சனியன்று சிவனை வழிபட்டால் சனி தோஷம் குறையும் என்று கூறப்படுகிறது. சிவன், சனி பகவான் ஆசீர்வாதம் பெற ஆடி சனி சிறந்த நாளாக சொல்லப்படுகிறது.

Similar News

News March 19, 2026

அஜித்குமார் மரணம்: தேர்தலில் தாக்க காத்திருக்கிறதா?

image

தற்போதைய ஆட்சியில் 25 கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அஜித்குமார் முதல் ஆகாஷ் வரை தென் மாவட்டங்களில் மரணங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், 2020-ல் சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த விவகாரம் 2021 தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

News March 19, 2026

தேர்தல் ஆணையத்தின் கையில் ‘ஜன நாயகன்’

image

‘ஜன நாயகன்’ படத்தின் மறுதணிக்கையில், ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் வாரிய அதிகாரிகள் திருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நடந்த இத்தணிக்கையை அடுத்து ரிலீஸ் அனுமதிக்காக ECI-க்கு அனுப்பப்பட்டுள்ளதாம். படத்தின் நாயகனான விஜய் அரசியல் கட்சி தலைவராக உள்ளதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி ’ஜன நாயகன்’ படத்தை ஆய்வுசெய்து ரீலிஸ் குறித்து ECI முடிவெடுக்குமாம்.

News March 19, 2026

பாஜக பயம்காட்டி கூட்டணி கட்சியை நெருக்குகிறதா திமுக?

image

சிபிஐ கட்சிக்கு, <<19413766>>5 இடங்களையே<<>> திமுக ஒதுக்கியுள்ளது. மேலும் சிபிஎம், விசிக கட்சிகளிடமும் திமுக கறார் காட்டுகிறது. மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், விசிக போன்றவை, இந்த ஆட்சியில் தங்கள் போர்க்குணத்தை கைவிட்டு மென்மை போக்கையே கடைப்பிடிக்கின்றன. தங்கள் விமர்சனம் பாஜக-அதிமுகவுக்கு பலம் சேர்த்துவிடக் கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம். இதையே திமுக தனக்கு சாதகமாக்கி நெருக்கடி தருகிறதா?

error: Content is protected !!