News July 27, 2024
திருவள்ளூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் .

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை.26) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். தொடர்ந்து அவர் வேளாண்மை துறை மூலம் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் கத்திரி குழிதட்டு மற்றும் தென்னங்கன்றுகள் ஆகியவற்றின் கீழ் 10 விவசாயிகளுக்கு ரூ.22,260 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Similar News
News September 7, 2025
ஆவடியில் நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாம்

ஆவடி மாநகராட்சி, ப்ளூ க்ராஸ் ஆப் இந்தியா மற்றும் தனியார் அறக்கட்டளை இணைந்து, நாய்களுக்கு இலவச தடுப்பூசி & மருத்துவ முகாமை இன்று (செப்.,7) நடத்துகிறது. இந்த முகாமானது திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு மண்டல வரி அலுவலகத்தில் நடைபெற உள்ளது என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் மூலம் ரேபிஸ் பரவுவதை தடுக்க இந்த தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.
News September 7, 2025
திருவள்ளூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று (செப்.,7) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 6, 2025
பூந்தமல்லியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏ.வி.எல் மேல்நிலைப் பள்ளியில் இன்று (செப்.6) நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.