News July 27, 2024

அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும்: ஓ.பி.எஸ்

image

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “தேர்தல் தோல்விக்கு பிறகாவது பிரிந்து கிடக்கும் அதிமுக மீண்டும் இணைய வேண்டும். அதிமுக மீண்டும் இணைந்தால் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். தொண்டர்கள் விருப்பப்பட்டால் பொறுப்புகளோடு கட்சியில் இணைவேன். இல்லையெனில் அடிப்படை உறுப்பினராக கூட கட்சியில் இணைவேன்” என்றார்.

Similar News

News March 7, 2026

சென்னையில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

சென்னை மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவலாம்!

News March 7, 2026

சென்னையில் திடீரென கட்சி தாவிய த.வெ.க-வினர்

image

சென்னை தியாகராய நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, 122 வது வார்டு, நந்தனம் பகுதியில் உள்ள எஸ்.எம். நகர் வாரிய குடியிருப்பு பகுதி இளைஞர்கள் நேற்று (மார்ச் 06), திடீரென தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். திமுக மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை வேலு முன்னணியில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 7, 2026

சென்னையில் நள்ளிரவில் உயர்ந்த சிலிண்டர் விலை

image

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 868 ரூபாயிலிருந்து 928 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்ந்த நிலையில் 928 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. அதேபோல் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து ரூ.2,043.50க்கு விற்கப்படுகிறது.

error: Content is protected !!