News July 27, 2024
பாஜகவில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தார்

மகாராஷ்டிராவில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ரமேஷ் குதே அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனா உத்தவ் தாக்கரே அணியில் இணைந்துள்ளார். சிவசேனா கட்சியில் அங்கம் வகித்த அவர், 2018இல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தாய் கட்சியில் இணைந்த அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 22, 2026
விமான டிக்கெட் விலைகள் அதிகரிக்குமா?

போர் காரணமாக ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் கட்டணங்கள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் எண்ணெய் விலை உயர்வால், விமான எரிபொருள் (ATF) விலைகளும் உயர வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் டிக்கெட் கட்டணங்களில் ஏற்படலாம் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் சமீபத்தில் கூறினார். இதற்கிடையில், சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன.
News March 22, 2026
10 மாதம் தொடர்ந்து பறக்கும் பறவை

Common Swift என்ற பறவை தரையிறங்காமல் தொடர்ந்து 10 மாதங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு வலசை போகும் இந்தப் பறவைகள், இடையில் எங்கும் நிற்பதில்லை. 40 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த பறவையின் இறக்கைகள் அதிக ஆற்றலைச் செலவழிக்காமல் நீண்ட நேரம் காற்றில் மிதக்க உதவுகின்றன. இனப்பெருக்க காலத்தில் மட்டுமே தரையிறங்குகின்றன.
News March 22, 2026
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டன் கண்டனம்

இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் ராணுவ தளமான டியாகோ கார்சியா மீதான ஈரான் தாக்குதலை பிரிட்டன் கண்டித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுப்பதற்காக, தங்களின் டியாகோ கார்சியா தளத்தை அமெரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பிரிட்டன் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து சுமார் 4000 கி.மீ தொலைவில் உள்ள பிரிட்டன் தளத்தை ஈரான் தாக்கியுள்ளது.


